உதயநிதி தொகுதியில் தொடரும் கோயில் இடிப்பு!

உதயநிதி தொகுதியில் தொடரும் கோயில் இடிப்பு!

Share it if you like it

உதயநிதி தொகுதியில் ஹிந்து கோயில் இடிப்பு தொடர்ந்து வருகிறது. இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஹிந்துக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்து கோயில்கள் பெருமளவில் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் அதிக அளவிலான ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொய்யாத்தோப்பு பகுதியிலிருந்த தேவி கருமாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் உதயநிதி தொகுதியிலுள்ள மற்றொரு கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, கண்டனமும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இளங்கோவன் வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஹிந்துக்கள், தி.மு.க. அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it