சமீபத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோவிலை கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வாரி மலை என்றும்,ஏசுமலையாகவும் மாற்றுவதாகவும் பொய்யான பிரச்சாரங்களை மக்களிடையே செய்து வந்தனர். இதை கண்டிக்கும் வகையில் சென்னிமலை ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் சென்னிமலை பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னிமலை பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், கிறிஸ்துவ முன்னணியினர் என சொல்லிக்கொண்டு சிலர் இந்து மதத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். அவர்களை காவல்துறை கண்டறிந்து கண்டிக்க வேண்டும் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னிமலையை யேசுமலையாக மாற்ற வேண்டிய தவறான நிகழ்விற்கு இந்து மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://x.com/NaMo_Bharathan/status/1714113880186859573?s=20