இந்திய திரை உலக ஜாம்பவானை பெருமைப்படுத்திய Google நிறுவனம்..!

இந்திய திரை உலக ஜாம்பவானை பெருமைப்படுத்திய Google நிறுவனம்..!

Share it if you like it

இந்திய திரை உலகத்திற்கு மட்டுமில்லாமல், உலக திரைப்பட நடிகர்களுக்கும், மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. கட்டபொம்மன், சுப்பிரமணிய பாரதி, இன்னும் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் மூலம் தேச உணர்வை இந்தியர்களுக்கு ஊட்டியவர். இந்நிலையில் நடிகர் திலகத்திற்கு 93-வது பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக அவரின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் இந்திய திரைஉலக ஜாம்பவானை பெருமைப்படுத்தி google doodle வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it