உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களின் விசேஷ தினமான
தை மாதம் பூச நட்சத்திர நாளில், தேவர்களைக் காத்து அசுரர்களை அழிக்க வேண்டி
முருகப் பெருமான் பார்வதிதேவியிடம் சக்தி வேல் பெற்ற சிறப்பான நாளாக தை பூசத் திருநாள் உள்ளது.
இந்த தைப்பூச நாள் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அலகு குத்துதல், வேல் குத்துதல், அடி தண்டம் இடுதல் போன்ற காணிக்கைகளை முருகனுக்கு செலுத்துவது வழக்கம்..
இந்த நாளை தமிழகத்தில் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டி பல ஆண்டு காலமாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில்,தற்போது தமிழக அரசு இதற்கு செவிசாய்த்து உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கூறுகையில் பல பேரிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்ததால் இனி வரும் காலங்களில் இந்த ஆண்டு முதல் அனைத்து வருடங்களிலும் தைப்பூசத் திருநாள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதன் மூலமாக தமிழகம் மற்றும் உலகளாவிய உள்ள முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா….
திரு. எடப்பாடி அய்யாவுக்கு நன்றியும் வாழ்த்தும்
பரவாயில்லை யே. கந்த சஷ்டி கவசமும், வேல் யாத்திரை யும் நன்றாக வேலை செய்திருக்கிறதே!!!!