விளைநிலத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினே : எங்கள் குழந்தைகள் படிக்க இடமில்லாமல் வராண்டாவில் படிக்கும் அவலத்தை பாருமய்யா !

விளைநிலத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினே : எங்கள் குழந்தைகள் படிக்க இடமில்லாமல் வராண்டாவில் படிக்கும் அவலத்தை பாருமய்யா !

Share it if you like it

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சமீபத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டாலும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தரம் உயர்த்தப்படாததால் மாணவ மாணவிகள் கடும் சிரமத்துடன் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.

மாணவ மாணவிகள் அமர்ந்து கல்வி கற்பதற்கு போதிய அறைகள் இல்லாததால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை பள்ளி வராண்டாவில் உட்காரவைத்து பாடம் நடத்தும் அவலம் அரங்கேறி உள்ளது. வெயில் நேரத்தில் மரத்தின் நிழலுக்கு கீழும் மாலையில் குடிநீர் தொட்டிக்கு அருகிலும் வகுப்புகள் நடத்தி கொண்டு வருகின்றனர். மழை காலங்களில் பாம்பு பூரான் போன்ற விஷ ஜந்துக்களால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் புலம்பி தீர்த்தனர்.

பள்ளி கட்டடமானது மிகவும் குறுகிய இடத்தில கட்டப்பட்டிருப்பதால் மாணவர்கள் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் அருகருகே இருப்பதால் மாணவிகள் யாரும் கழிவறையை பயன்படுத்துவதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த பள்ளியானது அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், அதற்கான வகுப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்த போது, அரசுக்கு சொந்தமான நிலமே, அந்த பகுதியில் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள வகுப்பறை கட்டடத்தின் மீது, மற்றொரு கட்டடம் கட்டலாம் என்றாலும் தற்போதுள்ள கட்டடம், அந்த அளவுக்கு வலுவானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறு அரசு பள்ளிகலின் நிலைமை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஆனால் திமுக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சி என்றால் ஒரு நாள் கூத்துக்காக தடால் புடலாக விருந்தினை படைத்தது சாலை முழுவதும் பழங்கள் காய்கறிகளால் அலங்காரம் செய்து மணமக்கள் கழுத்தினில் ஒரு நகை கடையே இருக்கும் அளவுக்கு தங்க அணிகலன்கள் அணிந்து ஜாம் ஜாம் என்று திருமணம் செய்வார்கள்.

திமுக கட்சியில் பதவியில் இருந்துகொண்டு மக்களின் வரிப்பணத்தினை கொள்ளை அடித்து திருமணம் செய்கின்றனர். இந்த அரசு பள்ளி மட்டும் இல்லாமல் தமிழகத்தில் ஏராளமான அரசு பள்ளிகளின் நிலைமையும் இதே போல் தான் உள்ளது என்பதை நாம் தினமும் வாசிக்கும் செய்தித்தாள்களிலும் சமக வலைத்தளங்களிலும் பார்த்திருப்போம். திமுக கட்சியில் உள்ள நிர்வாகிகளின் சொத்துக்கணக்கு வாழ்க்கை தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ்க மக்களின் வாழ்க்கை தரமும் பள்ளிகளின் தரமும் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே தான் போகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *