நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள சங்கிலி பூதத்தார் கோவில் இடத்தில் ஜான்சன், செலின்மேரி, சைமன் போன்ற உறுப்பினர்கள் அடங்கிய கிறிஸ்தவ குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். அதன் பிறகு சில தினங்களில் அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட துவங்கிய அந்த கிறிஸ்தவ குடும்பம் கோவில் நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததாகவும் அதை தொடர்ந்து ஆடி வெள்ளி திருவிழாவுக்காக கோவிலில் வெள்ளை அடிக்கும் பனி நடைபெறுக்கொண்டிருந்த போது அவர்களை வெள்ளை அடிக்கவிடாமல் குடும்பமே சேர்ந்து கோவில் சுவற்றின் மீது சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அலங்கோலப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அருகில் இருந்த தெய்வ சிலை மீதும் சுண்ணாம்பை ஊற்றி, உங்கள் தெய்வம் என்ன செய்துவிடும் பார்க்கலாம் என அவதூறாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிறிஸ்தவ குடும்பத்தினர் கோவிலில் ரகளை – நெல்லையில் அவலம்…
Share it if you like it
Share it if you like it