ஏழை ஹிந்து குடும்பத்தை மதம் மாற கட்டாயப்படுத்திய கிறிஸ்தவ மருத்துவமனை!

ஏழை ஹிந்து குடும்பத்தை மதம் மாற கட்டாயப்படுத்திய கிறிஸ்தவ மருத்துவமனை!

Share it if you like it

கிறிஸ்தவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்த ஹிந்து குடும்பத்திடம் மதம் மாற வேண்டும் என கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து சீரழித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, கேரளாவை தொடர்ந்து மதம் மாற்றம் செய்யும் மிஷநரிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, கிறிஸ்தவ பாதிரியார்களான மோகன் சி லாசரஸ், எஸ்றா. சற்குணம், ஜெகத் கஸ்பர், உள்ளிட்டவர்கள் ஹிந்து மதத்தின் மீது தாக்குதலையும், ஹிந்துக்களின் வழிபாட்டுமுறையையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது கண்கூடு. அந்த வகையில், தி. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கர்நாடகாவின் பசவனா பாகேவாடியில் வசிக்கும் இரண்ணா நாகூர் (34) தனது மூன்று வயது மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரியின் கீழ் செயல்படும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்பொழுது, உங்கள் மகனுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம். அதற்கு, பிரதிபலனாக உங்களது குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்கு வேலூரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

தாபாவில் சாதாரண (உணவகம்) ஊழியராக வேலை செய்து வரும், இரண்ணாவின் மாத வருமானம் 12,000 ரூபாய். தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரை 3 லட்சம் ரூபாய் இவர் செலவு செய்து உள்ளார். இதுதவிர, மகனின் மேல் சிகிச்சைக்காக உறவினர்களிடம் பண உதவி கேட்டுள்ளார். அது கிடைக்காத காரணத்தினால் இரண்ணா தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது தான், நிகழ்ந்துள்ளது இந்த மதமாற்ற சம்பவம். தினசரி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் நிபந்தனையுடன், தனது மகனின் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு தேவையான ரூ.10 லட்சம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக மிஷநரி மருத்துவமனை இரண்ணாவிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.

/https://thecommunemag.com/christian-missionary-hospital-in-vellore-asks-hindu-family-to-convert-to-christianity-in-return-for-medical-help/


Share it if you like it