தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், இக்காணொளி அமைந்துள்ளது.
இது உங்களது ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறியதையடுத்து, தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரிகளின் கை தற்பொழுது ஓங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு, இவர்களது அடாவடிகள், அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் லாவண்யாவிற்கு கிறிஸ்தவ மிஷநரிகள் கொடுத்த அழுத்தம் வாயிலாக அம்மாணவிக்கு நேர்ந்த கதியை நாடே நன்கு அறியும்.
அதேபோல, கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த சிலர் தனது பகுதியில் மத மாற்றம் செய்ய முயன்ற பொழுது அதை தட்டிக் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன்மூலம், மதமாற்றம் என்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இப்படிப்பட்ட சூழலில், பெண் கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்து குடும்பம் ஒன்றினை குறிவைத்து மதம் மாற்ற முயற்சி செய்து இருக்கின்றனர். இதையடுத்து, அக்குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் மதமாற்றம் செய்ய முயன்றவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுதவிர, அதனை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். இக்காணொளிதான், தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன் லிங்க் இதோ.
கிறிஸ்தவ மிஷநரிகளின் பிடியில் இருந்து தப்பிய இந்து மாணவி கிருத்திகா என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டருக்கு அளித்த பகீர் பேட்டி.

