கடந்த செவ்வாய்கிழமை (நவம்பர் 14) அன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் கிராமத்தில் உள்ள இந்து மக்களை, கிறிஸ்துவ மிஷனரிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்காக ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள குளத்தையே பயன்படுத்தியதாக காவல்துறையில் பொதுமக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். .
பாரதீய ஜனதா கட்சியின் (BJP) மாநில செய்தித் தொடர்பாளர் P. பானுபிரகாஷ் ரெட்டி, இந்த சம்பவத்தை அறிந்து, கிறிஸ்துவ மிஷனரிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தற்போது, உள்ளூர் இந்துக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துவ மிஷனரிகள் மீது கார்வேட்டிநகரம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/eOrganiser/status/1724673787919253872?s=20