காணாமல் போன ஒருவரின் பாஸ்போர்ட்டை கிறிஸ்தவ பாதிரியார் மீட்டு கொடுத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மாற்று மதத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறோம் என அம்மக்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக கிறிஸ்தவ மிஷநரிகள் பயன்படுத்தி கொள்கின்றனர் என் குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது. அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு இங்குள்ள குடிமக்களை வாழும் நாட்டிற்கு எதிராக திசை திருப்புவதே மதமாற்றம். அப்பாவி மக்களின் மண்டையை கழுவி தங்களின் சுயநலத்திற்காக தூண்டி விடுவதே மதமாற்றம். பிரிவினை சக்திகளுக்கு துணை போவதே மதமாற்றம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.
இப்படியாக, கிறிஸ்தவ மஷநரிகள் பணக்கார நாடுகளிடமிருந்து கோடி கணக்கான ரூபாய் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்தி கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுதவிர, மாற்று மதத்தில் உள்ள மக்களை நம்ப வைக்கும் விதமாக கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து பல்வேறு உத்திகளை இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், காஞ்சன் மிட்டல் என்னும் ஹிந்து பெண்மணிக்கு பேய் பிடித்து இருப்பது போலவும் இதற்கு, கிறிஸ்தவ பெண் மதபோதகர் ஒருவர் Zoom-ல் வந்து பேய் ஓட்டிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறுவன் ஒருவனின் தொண்டையில் கை வைத்து தனது வாயால் ஊதி அவனது நோயை குணப்படுத்தி இருந்தார். இது மருத்துவ துறைக்கே விடப்பட்ட மிகப்பெரிய சவால் என கிறிஸ்தவ பாதிரியாரை நெட்டிசன்கள் பதம் பார்த்து இருந்தனர். இப்படியாக, பாதிரியார்கள் செய்து வரும் கூத்துக்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அதே போல, கென்யா நாட்டை சேர்ந்த பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி தேவாலயத்திற்கு வந்தவர்களுக்கு டெட்டாய்ல் கொடுத்து 59 பேருக்கு மோட்சம் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பலர் முன்னிலையில் காணாமல் போன ஒருவருடைய பாஸ்போர்ட்டை தனது ஜெப வலிமையால் தனது காலணியில் இருந்து எடுத்து கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன் லிங்க் இதோ.