ஞானஸ்தானம் எடுத்து கொள்ள முயன்ற நபர் மின்சாரம் தாக்கி கதறி துடித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு படிப்பறிவு இல்லாத மக்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக கிறிஸ்தவ மிஷநரிகள் பயன்படுத்தி கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது. அந்தவகையில், பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே வேதனைக்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு, இவர்களது ஆதிக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் தான், கென்ய நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி தேவாலயம் வந்த மக்களுக்கு ’டெட்டாய்ல்’ கொடுத்து 59 பேரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பரலோகத்திற்கு அனுப்பி வைத்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் சிறுவனின் நோயை தனது வாயால் ஊதி குணப்படுத்திய சம்பவம் இன்று வரை தமிழக மக்களிடையே பேசுபொருளாக இருந்து வருகிறது. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து தங்கள் விருப்பபடி ஆட்டி படைக்கும் இதுபோன்ற பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன.
அந்தவகையில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மதம் மாறிய ஒருவரை ஞானஸ்தானம் செய்ய வேண்டி தண்ணீர் தொட்டியில் மூழ்க செய்கிறார். இதையடுத்து, தண்ணீரில் முழ்கிய நபர் எழுந்திருக்கும் பொழுது அருகில் இருந்த ஒலிபெருக்கியில் அவரது தலை இடித்து இருக்கிறது. அந்தவகையில், ஒலிபெருக்கி தண்ணீர் தொட்டியில் விழுந்த காரணத்தினால் தொட்டியில் இருந்த நீர் முழுவதும் மின்சாரம் பரவி ஞானஸ்தானம் எடுத்த நபரை தாக்கி இருக்கிறது. இதையடுத்து, அவர் அலறி துடித்த காணொளிதான் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.