நாமக்கல் மாவட்டம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, கம்பீரமான மலைமீது அமர்ந்து ஆட்சிபுரியும் அர்தநாரிஸ்வரர் ஆலயம் தான். கடந்த சில வருடங்களாக அந்த மலையை சுற்றியும், கோவிலுக்கு சொந்தமான இடத்திலும் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தவேண்டும் என இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளமல் இருந்துள்ளனர்.
ஆனால் சாலைவிரிவாக்க பணிகளுக்காக கோவில் இடத்தில் செயல்பட்டுவந்த ஜெபகூடம் ஒன்றை அரசு அப்புறப்படுத்தி உள்ளது. உடன் சேர்த்து அருகில் இருந்த பழமைவாய்ந்த விநாயகர் கோவில் அருகிலும் சில பணிகளை செய்ததால் கோவில் சிதிலம் அடைந்து பக்தர்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை இடம் மாற்றி ஏறத்தாழ சுமார் 20 அடிவரை நகர்த்திவைத்து வழிபட துவங்கி உள்ளனர்.
ஏற்கனவே சாலைவிரிவாக்க பணிகளுக்காக ஜெபக்கூடம் இடிக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த கிறிஸ்தவர்கள், இந்த விநாயகர் கோவிலையும் இனி செயல்பட விடக்கூடாது எனும் ஆத்திரத்தில். விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடம் மற்றொரு ஜெபக்கூடத்திற்கு செல்லும் வழியை மறைப்பதாகவும் எனவே விநாயகர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக களத்திற்கு வந்த போலீசார் விநாயகர் சிலையை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கிச் சென்றதோடு அதை தடுக்க முயன்ற சுமார் 25 இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்களை கைது செய்துள்ளனர்.
இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் எந்த ஜெபக்கூடத்திற்கு செல்லும் வழியில் விநாயகர் வைக்கப்பட்டதாக கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினார்களா அந்த ஜெபக்கூடமும் கோவில் நிலத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டுவருகிறது. ஆனால் இதுவரை அந்த ஜெபக்கூடத்தை போலீசார் அப்புறப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சம்பவம் நிகழ்ந்த அதே பகுதியை சேர்ந்த நபரிடமிருந்து பெறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.
சம்பவங்கள் இப்படி இருக்க பிரபல செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை செய்தியில், ஏதோ இந்து முன்னணியினர் புதிதாக ஒரு விநாயகர் சிலையை தேவாலயத்தின் அருகே வைத்து கலகம் செய்தது போல் சித்தரித்ததோடு. கிரிவலப்பாதை எனும் வார்த்தையை மலை சுற்றுப்பாதை என லாவகமான வார்த்தை பிரயோகம் மூலம் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதையும் மறைக்க முயற்சித்துள்ளனர். மேலும் சம்பந்தமே இல்லாமல் சாமியாடிய பெண் ஒருவரின் வீடியோவையும் காட்சிப்படுத்தி உள்ளனர், எழுப்புதல் ஜெபக்கூடங்களில் நடப்பதையும் புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்புமா என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.