முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாக எடப்பாடி விமர்சனம் செய்து இருக்கிறார்.
பா.ஜ.க. கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு களம் இறங்கி இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர், நேற்று முன்தினம் சென்னை வந்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதையடுத்து, திரெளபதி முர்மு இன்று மதியம் புதுச்சேரி வந்தார். இதையடுத்து, புதுவை முதல்வர் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். அந்தவகையில், பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இதனைதொடர்ந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது; குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு இமாலய வெற்றி பெற அ.தி.மு.க துணை நிற்கும். குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் பழங்குடியினப் பெண்ணை முதல்வர் ஸ்டாலின் அதரிக்கவில்லை. முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என முதல்வர் பேசுவதாக எடப்பாடி விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.