நாகை மாவட்டத்தில் மற்றொரு விசாரணை கைதி மரணம் அடைந்து இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செங்குன்றத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜசேகர் நேற்றைய தினம் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் உடல்நலக் கோளாறு காரணமாக இன்று நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் என உயிர் இழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தான, செய்தியை பிரபல ஊடகமான நியூஸ் 7 வெளியிட்டு இருக்கிறது. இச்சம்பவம், குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???