சத்தீஸ்கர் மாநிலம் சுகுமா மாவட்டத்தில் சுமார் 21 ஆண்டுகளாக பூட்டி வைத்திருந்த ஹிந்து கோவிலை சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திறந்து வைத்து பொதுமக்கள் இன்று தரிசித்ததாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சத்தீஸ்கர் மாநிலம் சுகுமா மாவட்டத்தில் ராமர் ஆலயத்தில் கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர். தீவிரவாதத்தின் இணையான அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ நக்சல்கள், சாமி கும்பிட அனுமதி இல்லையென ஸ்ரீராமர் ஆலயத்தை இழுத்து மூடினர். அவர்களின் அடக்குமுறைக்கு அஞ்சி, கிராம மக்கள் கோவிலை திறக்காமல் இருந்தனர்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினரின் உதவியை நாடி ராமர் கோவிலை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 74 பேரை கொண்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் அந்த கோவிலை திறந்து ராமர் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தனர். காலம் மாறினால் காட்சிகள் மாறும். வலிமை இல்லாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கம்யூனிச நக்சல்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. மத்தியில் வலிமையான ஆட்சி வந்த பிறகு நக்சல்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிச நக்சல் பல பகுதிகளில் இந்துக்களின் வழிபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்த நிலையில் இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது. கம்யூனிசம் என்பது வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்பதை பொதுமக்கள் உணர்ந்து விட்டனர்.