Share it if you like it
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் மகள் வீணா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். கொச்சியில் உள்ள தாது நிறுவனத்துக்கு சேவைகள் வழங்குவதற்காக இவருடைய நிறுவனம் ஒப்பந்தம் செய்து 1.72 கோடி ரூபாய் வீணாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த சேவையும் வழங்கவில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து சமூக ஆர்வலர் கிரிஷ் பாபு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக ஆர்வலர் கிரிஷ் பாபு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது.
Share it if you like it