ஹிந்து என்பது பாரசீக மொழி, இது இந்திய மொழியல்ல அதன் அர்த்தம் ஆபாசம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் செயல் தலைவருமாக இருப்பவர் சதீஷ் ஜார்கிஹோளி. இவரது, பேச்சு ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கும். இவரை, கர்நாடகாவை சேர்ந்த திருமாளவன் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, இவரது பேச்சில் பிரிவினை வாடை மிகவும் தூக்கலாக இருக்கும்.
இதனிடையே, கர்நாடக மாவட்டம் பெலகாவி நிப்பாணியில் நேற்றை முன்தினம், மனித உறவு கமிட்டி சார்பில் வீடுதோறும், புத்தர், பசவா, அம்பேத்கர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு பேசினார் ; இந்து இந்திய வார்த்தை அல்ல. அது ஆபாசமான வார்த்தை. இந்தியாவுக்கும், பாரசீகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஹிந்து எனும் வார்த்தை குறித்து நாம் விவாதம் செய்ய வேண்டும். அதன் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எங்கிருந்தோ வந்த ஹிந்து மதத்தை நம் மீது திணிக்க பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் தலைவரின் இக்கருத்து கர்நாடக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, அம்மாநில முதல்வர் பசவராஜ், காங்கிரஸ் தலைவர்கள் என பலர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியதாவது ; சதீஷ் ஜார்கிஹோளிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு நாத்திகர். ஹிந்து மக்களின் எதிரி, அவர் ஹிந்து மதம் குறித்து பேச அவருக்கு உரிமை கிடையாது. நிச்சயம் அவர் ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்து மதம் என்பது புராதான வார்த்தை. கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே ஹிந்து என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
.