வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். அதாவது, காங்கிரஸ் தோல்வி பற்றி தனக்கு கவலையில்லை என்பது போல அவரது கருத்து அமைந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திரிபுரா மற்றும் நாகாலந்தில் பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், போட்டியிட்ட மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இவ்வாறு கூறியிருக்கிறார் ; “வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டது. வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என பேட்டியளித்து இருக்கிறார்.