பினராயி விஜயன் உடனே பதவி விலக வேண்டும் என பா.ஜ.கவினர் கேரளாவில் தீவிர போராட்டம். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கை விசாரிக்க கூடாது என மறுபக்கம் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம். உண்மையிலேயே யார் ஊழலை எதிர்க்கும் கட்சி என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
தங்கம் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, அவரது அலுவலக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தார். இதையடுத்து, கேளர முதல்வர் உடனே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதவிர, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என முதல்வருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விவகாரத்தில் பா.ஜ.க மிக தீவிரமாக போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறது. இதன்காரணமாக, ஆளும் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கேரள மாநில பா.ஜ.க யுவ மோர்ச்சா செயலாளர் மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள பாப்பண்ணன் கடை வார்டு கவுன்சிலராக இருக்கும் ஜி.எஸ். ஆஷாநாத் பா.ஜ.க தொண்டர்கள் ஊழல் அரசுக்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார். சினிமா பாணியில் 2000 கோடி என்ற தலைப்பில் இது குறித்து நாங்கள் செய்தி வெளியிட்டு உள்ளோம்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியை கண்டித்து பா.ஜ.க தீவிரமாக போராடி வருகிறது. மறுபுறம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்தியின் ஊழல் வழக்கை விசாரிக்க கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் டெல்லியில் கபட நாடகம் ஆடி வருகின்றனர். இதில், இருந்தே ஊழலுக்கு எதிராக உண்மையாக போராடுவது எந்த கட்சி எது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.