கர்நாடகாவை சேர்ந்த 90 வயது மூதாட்டியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 1 லட்சம் வந்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் விடியல் அரசு கொடுத்த வாக்குறுதியை காட்டிலும் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி தெளித்தது. எனினும், அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்ற முடியாமல் தமிழக அரசு போல திணறி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை காட்டிலும் மே மாதத்தில் அதிகளவில் மின்சார கட்டணம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீர் மின்சார உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தில் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பாக்யநகரை சேர்ந்தவர் கிரிஜம்மா (வயது 90) . இவர், தனது வீட்டில் ஒரே ஒரு பல்ப் மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இவருக்கு ஜூன் மாத மின்சார கட்டணமாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 315-க்கு பில் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜம்மா, ‘‘இதுவரை மாதத்துக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை மட்டுமே மின்கட்டணம் வரும். இந்த முறை எப்படி ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வந்தது” என மின்சார துறை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.