தி.மு.க.வை போல் போலி வாக்குறுதி கொடுத்து கர்நாடக காங்கிரஸ் அரசு தற்போது திணறி வரும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதன்காரணமாக, ஆளும் கட்சி மீது பொதுமக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்த தி.மு.க. இன்றுவரை விழி பிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை காப்பியடித்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கிறது. அந்த வகையில், பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து விட்டு போதிய பஸ் வசதிகளை காங்கிரஸ் அரசு செய்து தரவில்லை. இலவசத்தை நம்பிய பொதுமக்கள் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழக மக்களை போல் விடியல் கிடைக்கும் என நம்பிய கர்நாடக மக்களுக்கு தற்போது பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.