இந்தியாவில் 70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பொய்யை தவிர வேறொன்றும் காங்கிரசுக்கு தெரியாதோ? என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
இந்தியாவில் 70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்” – பிரியங்கா காந்தி.
பொய்யை தவிர வேறொன்றும் காங்கிரசுக்கு தெரியாதோ?
- நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி பேர்.
- இதில் 50 விழுக்காடு மக்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 35 கோடி பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள்.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 கோடி பேர்.
- மேலும் 15-20 வயதுக்குட்பட்டவர்கள் 10 கோடி பேர். இவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் உள்ளனர்.
- ஆக 60 கோடி பேருக்கு வேலை தேவையில்லை.
- நாட்டில் மொத்தம் 10 கோடி பேருக்கு தான் வேலை உள்ளது என்று பிரியங்கா சொல்கிறார்.இதில் 5 கோடி பேர் மத்திய – மாநில அரசு பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் யாருக்குமே வேலை இல்லை என்று சொல்கிறார் பிரியங்கா காந்தி. எதையாவது பேச வேண்டும் என்று உளறுவது வாடிக்கையாகி விட்டது காங்கிரஸுக்கு.
- மேற்சொன்ன கணக்குப்படி இந்தியாவின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை நான்கு. வீட்டில் ஒருவருக்கு வேலை என்றால் கூட 35 கோடி பேருக்கு வேலை தேவை. அந்த கணக்கை தாண்டி தற்போது இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலை உள்ளது என்பது தான் உண்மை.
பிரியங்கா காந்தி சொல்வது போல், இந்தியாவில் 70 கோடி பேருக்கு வேலையில்லையென்றால் சூடானில் இருக்கும் நிலை தான் இந்தியாவிலும் இருக்கும். அடுத்த வேளைக்கு அரிசி இல்லாத நிலையே இருக்கும். காங்கிரஸ் அதை தான் விரும்புகிறதோ? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.