காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி குடும்ப அரசியலுக்கு கொடுத்த விளக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி, ஒரு விளக்கத்தை யாரும் கொடுக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதுதவிர, நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி? வெற்றி பெற வேண்டும் என்பது பற்றியும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஒரு பதவி என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
காங்கிரஸ் கட்சி உதய்பூரில் ஒன்று கூடி சிந்தன் பைடெக் வைத்தார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்று சொல்கிறார்கள். கார்த்தி சிதம்பரம் எம்.பியாக இருப்பதால். ப.சிதம்பரம் மீண்டும் எம்.பியாக முடியாதே என்ற விதத்தில் நெறியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, கே.எஸ். அழகிரி கூறியதாவது; இதனை நீங்கள் இப்படி பார்க்கலாமே, சிதம்பரம் ஒரு குடும்பம், கார்த்தி சிதம்பரம் ஒரு குடும்பம் என்று அற்புதமான முறையில் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.
உங்களுக்கு இங்கு விவசாயம் செய்ய முடியவில்லை என்றால் அதோ தெரிகிறதே நிலா, அங்கு உங்களுக்கு நிலங்களை வழங்குவேன். நீங்கள் உருளை கிழங்குகளை அங்கு பயிர் செய்து குஜராத்தில் விற்பனை செய்து வாழலாம் என்று ராகுல் காந்தி பொதுமக்கள் முன்னிலையில் பேசி இருந்தார். இந்தியாவின் இம்ரான் கான் என்ற தலைப்பில் இக்காணொளியை, பாகிஸ்தானை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆரிஃப் ஆஜாகியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நான் ஒரு புது மிஷின் ஒன்றினை கண்டுபிடிக்க போகிறேன் அதில் ஒரு பக்கத்தில் உருளை கிழங்குகளை வைத்தால் மறுபக்கம் அது தங்கமாக வெளிவரும் என்று ராகுல் காந்தி பேசியதாக செவிவழி செய்தி ஒன்று உலாவி வருகிறது.
தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப கே.எஸ். அழகிரியின் இந்த பேட்டி அமைந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.