கை கொடுக்காமல் அவமதித்த ராகுல்… பா.ஜ.க.வுக்கு தாவும் கார்த்தி சிதம்பரம்!

கை கொடுக்காமல் அவமதித்த ராகுல்… பா.ஜ.க.வுக்கு தாவும் கார்த்தி சிதம்பரம்!

Share it if you like it

தமிழக எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை அவமானப்படுத்தும் வகையில், ராகுல் காந்தி நடந்து கொண்டதால், அவர் பா.ஜ.க.வுக்கு தாவும் மனநிலையில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சிவகங்கை தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன். இந்த சூழலில்தான், தகுதி நீக்க சம்பவத்திற்குப் பிறகு பாராளுமன்றத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு ராகுல் காந்தி நேற்று வந்தார். அப்போது, அலுவலக வாயிலில் காத்திருந்த பலரும் ராகுல் காந்திக்கு கைகொடுத்து வரவேற்றனர். பதிலுக்கு ராகுலும் கைகொடுத்து சிரித்துவிட்டுச் சென்றார். அதேபோல, கைகொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரமும் கையை நீட்டினார். ஆனால் ராகுல் காந்தியோ, அவருக்கு கைகொடுக்காததோடு, அவரது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் சென்று விட்டார்.

ராகுலின் இக்கோவத்திற்கு காரணம் என்ன? என்பதுதான் தற்போது காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து கட்சியினர் மத்தியிலும் பட்டிமன்றம் நடத்தாக குறையாக நடந்து வரும் விவாதம். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றனர். உதாரணமாக, கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கட்சிக்கு எதிராகவே அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருபவர். அதாவது, மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தாலும், அதிலுள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்த்து ஆதரவு தெரிவிப்பவர் கார்த்தி சிதம்பரம்.

அதேபோல, சமீபத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரித்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சசி தரூருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதுகுறித்து அவர் ஓப்பனாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நீட் தேர்வு விலக்கு ரகசியம் குறித்து செய்தியாளர்கள் கார்த்தியிடம் கேட்டதற்கு, உதயநிதி பேசியது குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள், அவரைப் பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று எரிந்து விழுந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தபோது அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பாஜகவை வசைபாடிக் கொண்டிருக்கு, கார்த்தி சிதம்பரமோ கூலாக Wordle game விளையாடிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டை அவர் விளையாடியதில் தவறில்லை. ஆனால், அதை ட்விட்டரிலும் பகிர்ந்து வந்தார். அதேபோல, ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும், இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். ஆக, இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக திரும்பி விட்டது.

இதுபோன்ற காரணங்களாலா, கார்த்தி சிதம்பரம் மீது ராகுல் காந்தி கடும் கோவத்தில் இருந்திருக்கிறார். ஆகவேதான், கார்த்தி சிதம்பரத்துக்கு கைகொடுக்காமல் தவிர்த்து விட்டுச் சென்று விட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இது ஒருபுறம் இருக்க, கார்த்தி சிதம்பரம் கடந்த சில வருடங்களாவே காங்கிரஸ் கட்சியினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறாராம். இதுதான் அவரது காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு மனநிலைக்கு காரணம் என்றும் கூறுகிறார். ஆகவே, கார்த்தி சிதம்பரம் விரைவில் பாஜகவில் சேரலாம் என்றும் கூறிவருகிறார்கள்.


Share it if you like it