கர்நாடகாவில் உள்ள ஷிவமொகா தொகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் ஹிந்தியில் பேசினார். இதை, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கன்னடத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய பாணியில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்று ராகுல் அதிருப்தி அடைந்தார். சில நிமிடங்களிலேயே அமைச்சரை, ‘மொழி பெயர்க்க வேண்டாம், போய் அமருங்கள்’ என்று திருப்பி அனுப்பி விட்டார். பெரும் தர்மசங்கடத்தில் அமைச்சரும் இருக்கையில் அமர்ந்தார். பின், ஹிந்தியிலேயே ராகுல் தொடர்ந்து பேசினார்.
ராகுலுக்கு இதுபோல் நடப்பது முதல்முறை அல்ல. முன்னதாக ஒரு பிரச்சார கூட்டத்தில் ராகுல் பேசிய போது அதனை மொழிபெயர்க்க தெரியாமல் தப்பு தப்பாக மொழி பெயர்த்தார். இந்த காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலானது. ராகுலுக்கு செல்லும் இடமெல்லாம் ஏழரை சனியாகவே உள்ளது.
சமீபத்தில் கேரளாவில் ராகுலின் சொந்த தொகுதியான வயநாட்டில் நக்ஸ்லைட்டுகள் நுழைந்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் தேர்தலில் வாக்களிக்கதிர்கள் என்று மிரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.