ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்: பீகாரில் நடந்த விவாதம்!

ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்: பீகாரில் நடந்த விவாதம்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் திருமணம் எப்போது என பீகாரில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து இருக்கிறது. அந்த வகையில், பீகார் முதல்வர் தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர்.

இதையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த, பத்திரிகையாளர் சந்திப்பில், பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, அவர் உரையாற்றும் போது ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். மோடிக்கு எதிரான கூட்டம் என்று கூறிவிட்டு, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பேசியிருப்பதுதான் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it