முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது என்பது நிதர்சனமான உண்மை. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு மக்களை காக்க முடியாமல் படுதோல்வியடைந்த அரசாக மாறி விட்டது என்பது தமிழக மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்புப் பேருந்துகள் குறித்து இவ்வாறு தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பேரழிவுக்கான செய்முறையாகும். நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு வெகுஜன இயக்கம் (மக்கள்) செல்வது மேலும் பரவலை ( (கொரோனா பரவல்) அதிகரிக்கும். தயவு செய்து இதனை நீக்கவும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
This is a recipe for disaster. Mass movement from urban centres to rural areas is going to be a super spreader. @CMOTamilnadu please rescind this. #lockdown pic.twitter.com/N5w5nolhlr
— Karti P Chidambaram (@KartiPC) May 22, 2021