மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது குண்டு வீச்சு நடைபெற்று இருக்கும் சம்பவம் கேரளா மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநில வயநாடு எம்பியுமாக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஏதோ ஒரு கருத்தினை பதிவு செய்து இருக்கிறார். இதனால், கடும் கோவம் அடைந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த தோழர்கள் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய ரகளையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது; பிற்பகல் 3 மணியளவில், வயநாடு எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை SFI தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அலுவலகத்தின் உள்ளே புகுந்து ஊழியர்கள் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கம்யூனிஸ்ட் கட்சியை மிக கடுமையாக சாடி இருந்தார்.
இச்சம்பவம், அரங்கேறி சரியாக ஒருவாரம் முடிவதற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது குண்டு வீச்சு நடைபெற்று இருப்பது கேரள மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்க கூடும் என பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.