காங்கிரஸ் எம்பி சுனில்போஸ் என்பவர் அதிகாரியான சவிதா அவர்களுக்கு நெற்றியில் குங்குமம் வைத்த சம்பவத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாம்ராஜ்நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்போஸ் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது கோவில் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தபட்டது. மேலும், எம்.பி.கோவிலுக்கு வருகை தந்த போது அவருடன் சுற்றுலா துறை இணை இயக்குனர் சவிதா மற்றும் அதிகாரிகள் பலர் வந்தனர். அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்தனர்.
பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன்பு சுனில்போஸ் எம்.பி. அதிகாரி, சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார். அவர் அதிகாரி சவிதாவுக்கு குங்குமம் வைத்த விதம் உடன் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.