காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்களாலேயே பா.சிதம்பரம் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை அதிக முறை ஆண்ட கட்சி என்ற பெருமையை கொண்டது காங்கிரஸ். பாரத நாட்டின் மிக பழமையான கட்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒரே குடும்ப ஆதிக்கம் காரணமாக, அக்கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் தற்பொழுது செல்லா காசாக மாறியுள்ளது. இதுதவிர, அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மாற்று கட்சியில் அடைக்கலம் தேடி ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். மூழ்கி கொண்டு இருக்கும் கட்சியை காப்பாற்ற வேண்டிய ராகுல் காந்தி, தனது பெண் தோழியுடன் பொழுது போக்கிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதனிடையே, ராகுல் காந்தி உடன் இருந்த பெண்மணி சீன தூதர் என தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீன தூதரிடம் நேரத்தை செலவிடும் ராகுல் காந்தியிடம், நாட்டை ஒப்படைத்தால் தேசத்தின் நலன் எவ்வாறு இருக்கும் என்று பலர் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பா.சிதம்பரம். நீதிமன்றத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அக்யூஸ்டுகளுக்கு ஆதரவாக பா.சிதம்பரம் ஆஜராக வந்ததாக, பா.ஜ.க மூத்த தலைவர் ஏ.பி. முருகானந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செல்வாக்கு மிக்க தலைவராக ஒரு காலத்தில் இருந்த பா.சிதம்பரத்திற்கு இந்த நிலைமையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏ.பி. முருகானந்தத்தின் ட்விட்டர் பதிவு இதோ.