காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜூன் 5 ஆம் தேதி நடந்தது.
தில்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் ரௌத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,
சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்பங்கேற்றனர்.
இந்நிலையில் இண்டி கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி நின்றுள்ளனர். அதில் விசிக தலைவர் திருமாவும் முன் வரிசையில் நின்றுள்ளார். அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திருமாவை கையை பிடித்து இழுத்து நீங்கள் முன் வரிசையில் நிற்க வைக்காமல் ஓரமாக நிற்க வைத்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கூட்டத்தில் ஸ்டாலின் எங்கு நிற்கிறார் என்றே தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் புலி போல் இருக்கும் திருமா, ஸ்டாலின் டெல்லி போனால் பூனை போல் ஆகிவிடுகின்றனர்.