சமீபத்தில் வடமாநிலங்களில் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை இப்பொது கண்டுபிடித்துள்ளனர். குல்சார் ஷேக் என்ற யூடியூபர் ஒருவர் ரயில் தண்டவாளங்களில் சைக்கிள்கள், சோப்புகள், கற்கள் உள்ளிட்ட பொருட்கள் பலவற்றை ரயில் தண்டவாளங்களில் ரயில்கள் வரும்போது வைத்து அதனை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த சட்ட இந்து பாதுகாப்பு என்கிற ஹிந்து அமைப்பினர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் குல்சார் ஷேக் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் ரயில்கள் செல்லும் தண்டவாளங்களில் மர்ம நபர்கள் பெரிய பெரிய கற்களை வைத்து ரயில் விபத்தை ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.