திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தேர்வலம் வரும் பெரிய விதியில் தார் சாலைக்கு பதிலாக கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையத்தை சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டால் தேர் வரும்போது சிக்கல் ஏற்படும் எனவும் எனவே கான்கிரீட் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிக்கேசவலு ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி 70% முடிக்கப்பட்டு விட்டதாகவும் தேர்களில் ஹைட்ராலிக் பிரேக் அமைக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்படாது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் கான்கிரீட் சாலைக்கு தடை விதிக்கும் மனுவை தள்ளுபடி செய்தனர்.

திருவண்ணாமலை தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைக்க தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்
Share it if you like it
Share it if you like it