தொடரும் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழும் அவலம் : பள்ளி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசு !

தொடரும் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழும் அவலம் : பள்ளி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசு !

Share it if you like it

காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் 155 மாணவ – மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில், 2010ல், அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டத்தின் கீழ், 9.75 லட்சம் ரூபாயில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

கடந்த 2020ல் இக்கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் மோசமான நிலையிலும், அதே வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. சேதமடைந்த வகுப்பறை கட்டடத்திற்கு மாற்றாக, 62 லட்சம் ரூபாயில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், புதிய கட்டடத்தில் பைகளை வைத்து, இறை வணக்கக் கூட்டத்திற்கு சென்றனர்.

அப்போது, 7ம் வகுப்பு மாணவர்கள் அமரும் இடத்தின் கூரையில் இருந்து, சிமென்ட் காரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தன. இதில், மின்விசிறியின் ஒரு பகுதி சேதமடைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். அவர்கள் இறைவணக்கக் கூட்டத்தில் இருந்ததால் தப்பித்தனர்.

ஏற்கனவே தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால், 10 ஆண்டுகளில் கட்டடம் சேதமடைந்தது. அதற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடத்தின் கூரை, ஆறு மாதம்கூட தாக்குப்பிடிக்காமல் பெயர்ந்து விழுந்ததால், அக்கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

குருவிமலை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழுந்த சிமென்ட் காரையை, கையில் எடுத்தாலே அப்பளம்போல் நொறுங்குகிறது. உறுதித் தன்மையின்றி மிருதுவாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், மற்ற கூரைகளும் திடீரென பெயர்ந்து விழ வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன், பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இப்பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர், கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இதுபோல் நடப்பது இதுதான் முதல்முறை அல்ல. சில தினங்களுக்கு முன்பு இதே காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் இதுபோல் சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே திமுக அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அருகே காவாந்தண்டலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு மூன்று பழைய கட்டடங்கள் மற்றும் இரு புதிய கட்டடங்கள் உள்ளன. இவற்றில் 115 மாணவ – மாணவியர் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பள்ளியில் 2 மற்றும் 3ஆம் வகுப்புகள் 1965ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் நடத்தப்படுகின்றன. மழைக் காலம் வந்துவிட்டால் வகுப்பறை முழுவதும் ஒழுகத் தொடங்குவதாகவும் இதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளியின் கோரிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை மதியம் அந்த பழைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவியர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பள்ளி கட்டடம் கட்டிய மூன்று மாதத்திலேயே இடிந்து விழுகிறது என்றால் எந்த லட்சணத்தில் அரசு பள்ளிக்கூடத்தை கட்டியிருக்கிறதை பாருங்கள். ஏழை மாணவ மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க பயப்படுகின்றனர்.

மாணவ மாணவிகளின் அத்தியாவசிய தேவையாகிய பள்ளிக்கூடத்தை கூட தரமான முறையில் கட்டிக்கொடுக்க திமுக அரசால் முடியவில்லை. மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிய பேருந்தும் இதே நிலைமையில் தான் உள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானத்திரையான் பாளையத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பிபிக்ஷா என்கிற மாணவி பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியபோது சிறுமி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலைமையில்தான் அரசு பள்ளிகளும், அரசு பேருந்துகளும் உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *