அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலை வழக்கம் போல இரவு பூட்டிவிட்டு இன்று காலை கோவிலின் பூசாரி திறந்து உள்ளார். அப்பொழுது சாமியின் கழுத்தில் அணிவிக்கப் பட்டிருந்த தாலி செயின், தங்க காசு அடங்கிய 17 சவரன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமானதைக் கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கோவிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருடன் கோவிலுக்குள் நுழைந்தது எப்படி என்று சந்தேகம் எழுந்தது.
அப்போது தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் சாமியின் கழுத்தில் அணிவிக்கப் பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வரும் காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் 250 சவரனுக்கு மேல் நகை மற்றும் 5 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் வீட்டிலேயே தைரியமாக திருடர்கள் திருட ஆரம்பித்து விட்டனர். முதலில் போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. தற்போது திரும்பும் பக்கம் எல்லாம் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போதை பொருள் முடிந்தது அடுத்து திருட்டுக்கு வந்துவிட்டனர். திருட்டிலும் தமிழ்நாட்டை முன்னேற்றி விடுவார்கள் திமுக அரசு. திமுக ஆட்சியால் தமிழ்நாட்டின் நிலை சந்தி சிரிக்கிறது.