கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் நேற்று மாமன்ற கூட்டம் நடந்தது. அதில் திமுகவை சேர்ந்த மேயர் சத்யா தலைமை வகித்தார். ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அந்த கூட்டத்தில் 22 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுகையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள, 16 வார்டுகளில் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் ஏதும், இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பேற்று செய்யவில்லை. தெரு நாய்கள் பிடிக்கப்படவில்லை.நிலைக்குழு கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை என்று குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் எங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் திமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த நிலையில் மேயர் சத்யாவிற்கு எதிராக, தி.மு.க.வை சேர்ந்த துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில், தனியார் ஓட்டலில் போட்டி கூட்டம் நடத்தினர். கோவை, திருநெல்வேலி, காஞ்சிபுரத்தை தொடர்ந்து, ஓசூர் திமுக மேயர் சத்யா மீது, தி.மு.க., கவுன்சிலர்களே அதிருப்தியில் இருப்பதை தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை எதிரே உள்ள உயர் கோபுர மின்விளக்கு 2 வருடங்களாக எரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுகவை சேர்ந்த 9 வது வார்டு உறுப்பினர் நாகூர் மீரான் உடலில் மின் விளக்குகளை கட்டிக்கொண்டு வந்தவாசி நகர்மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது : எனது வார்டு அடிப்படை தேவையான வசதிகள் செய்து தரவில்லை. உயர் கோபுர மின்விளக்கு 2வருடமாக பழுதடைந்து எரியவில்லை, மண் சாலைகளாக சாலைகள் உள்ளது. இதனை கண்டித்து வந்தவாசி நகராட்சி நகர மன்ற கூடத்தில் போராட்டம் நடத்தினேன் என்று கூறினார்.
திமுக மேயரிலிருந்து கவுன்சிலர்கள் வரை யாருமே சரியாக வேலை செய்வதில்லை என்பது இதிலிருந்து நன்றாக தெரிகிறது.ஒருபுறம் திமுக மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திமுக நகராட்சி தலைவர்கள் மீது திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.