ஹிந்துக்களை மதம் மாற வற்புறுத்திய பாதிரியாருக்கு எதிராக ஹிந்துக்கள் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு கிறிஸ்தவ மிஷநரிகளின் கை ஓங்கியுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தீவிரமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஸ்டாலின் ஆட்சியில் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தி.மு.க ஆதரவு ஊடகமான யூ2 புரூட்டஸ் சமீபத்தில் தில்லை நடராஜரை இழிவுப்படுத்தியதே சிறந்து சான்று. இதுதவிர, ஹிந்துக்களின் முகத்தில் குத்துங்கள் என்று பேசிய எஸ்றா.சற்குணம் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, ஹிந்து கடவுள்கள் சாத்தான் என்று பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையையும் இந்த ஆளும் தி.மு.க அரசு எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்
இப்படியாக, ஹிந்துக்கள் தி.மு.க அரசால் தொடர்ந்து பல இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், அப்பகுதியை சேர்ந்த பாதிரியார் ஏசுபாதம் என்பவர் ஆதி திராவிட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதற்கு, அவ்வூர் மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அடைத்து பாதிரியார் அட்டூழியம் செய்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.