ஊட்டியில் கிறிஸ்துவ மிஷனரிகள் போதை விழிப்புணர்வு என்கிற போர்வையில், கால்பந்தட்ட போட்டி நடத்தி மதமாற்றம் செய்வதாவும், அதனால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து இந்து முன்னணி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, கந்தால் மைதானத்தில் வருகின்ற 15,16,17/06/2024 ஆகிய தேதிகளில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில், போதை விழிப்புணர்வு என்கிற போர்வையில், மதம் மாற்றும் நோக்கத்தோடு நடத்தப்படும் கால்பந்தட்ட போட்டி நடத்த ஆட்சேபனை தெரிவித்து, உதகை T- 3காவல் நிலையம், மாவட்ட விளையாட்டு அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோர்க்கு, உதகை நகர், இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.