மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் : திருந்தமாட்டீங்க இல்ல ….வருந்தமாட்டீங்க இல்ல !

மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் : திருந்தமாட்டீங்க இல்ல ….வருந்தமாட்டீங்க இல்ல !

Share it if you like it

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுவை மற்றும் சேலம் ஆகிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனர். மேலும், இச்சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எழுப்பப்பட்டு, உரிய விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுட்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தன.

மேலும், இக்குற்ற சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமர் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.

அதன்படி, 3 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கண்ணுக்குட்டி, விஜயா, சின்னத்துரை, ஜோசப்ராஜா, மாதேஷ், கண்ணன், சக்திவேல், பன்ஷிலால், கௌதம்சந்த், கதிரவன், சிவகுமார் ஆகிய 11 பேரிடம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான குழுவினர் விசாரணையை நடத்தி பல்வேறு தகவல்களை பெற்றனர்.

இந்த நிலையில்‌, 3 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், 11 பேரையும் நேற்று புதன்கிழமை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கைது செய்யப்பட்ட இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்தார்.

கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்துள்ளனர். 65 உயிர்களை இழந்தும் எந்த தைரியத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்கின்றனர். யார் கொடுக்கின்ற தைரியம் இது. எத்தனை பேர் குடித்து இறந்தாலும் திமுக அரசு மதுவிலக்கு கொண்டு வரப்போவதில்லை என்கிற தைரியத்தில் இதுபோல் செய்கிறார்களா ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

!


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *