செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4 வரை நீட்டிப்பு !

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4 வரை நீட்டிப்பு !

Share it if you like it

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ல் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.

சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த அவர், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (பிப்.,20) நிறைவு பெற்றதை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Share it if you like it