சீனாவை சேர்ந்த ஆய்வகம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பரவலுக்கு தங்கள் அரசே முக்கிய காரணம் என சமீபத்தில் கூறியிருந்தார். அடுத்ததாக வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றிய பல ஆராய்ச்சியாளர்கள், 2019-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பு அம்பலப்படுத்தியது.
இப்படி கொரோனா வைரஸ் பரவல் சீனாவின் திட்டமிட்ட சதி என்பதற்கான ஆதாரங்கள் தினம் தினம் வெளியாகி வருகிறது இந்நிலையில் வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். மேலும் விசாரணை அறிக்கையை, 90 நாட்களுக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டு. வைரஸ் பரவலுக்கான முழு காரணம் தெரிய ஒத்துழைக்கும் படி, நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு நெருக்கடி தரவும் முடிவு செய்யப்பட்டதாக சிலதினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின இந்நிலையில்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனா பரவலுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும், கொரோனா சம்பந்தமான அனைத்து தகவல்களையும், கொடுத்து சீனா தனது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.