மாப்பிள்ளைக்கு மச்சம்யா…! தமிழக வாலிபருக்கு லண்டன் பெண்ணுடன் டும்.. டும்.. டும்…!

மாப்பிள்ளைக்கு மச்சம்யா…! தமிழக வாலிபருக்கு லண்டன் பெண்ணுடன் டும்.. டும்.. டும்…!

Share it if you like it

கடலூரைச் சேர்ந்த வாலிபர், லண்டர் பெண்ணை காதலித்து ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி பத்மாவதி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜாமணி – ஈஸ்வரி தம்பதியின் மகன் ரஞ்சித். பொறியியல் பட்டப்பட்டிப்பு முடித்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது, ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே, பெற்றோர் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து, கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து மணமகன் ரஞ்சித் கூறுகையில், “நான் பொறியாளர் பட்டபடிப்பு முடித்து ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு அன்னாலுய்சாவும் என்னுடன் பணிபுரிந்தார். அப்போது, இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதம் பெற்றவுடன் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். இதுதொடர்பாக, இரு வீட்டு பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம். சம்மதம் பெற்ற பிறகு, இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, அன்னாலுய்சா கூறுகையில், “நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்திய கலாசாரம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஆகவே, தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை கட்டி மங்கல வாத்தியம் முழங்க திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி, திருமணம் நடைபெற்று எனது ஆசை நிறைவேறி இருக்கிறது. மேஸும், ரஞ்சித்தை அதிகமாக காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து, தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு, புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

வாழ்க மணமக்கள்!


Share it if you like it