கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் திமுக அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த கார் பந்தயம் பேச்சானது தொடங்கியதிலிருந்தே அதற்கான எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாத கார் பந்தயத்தை தடுத்து நிறுத்த சிலர் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்திருந்தனர். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தடையை மீறி கார் பந்தயத்தை சென்னையில் நடத்தியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார் உதயநிதி. இந்த கார் பந்தயத்தை நடிகை ஒருவருக்காகத்தான் நடத்துகிறார் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஒருவிதமாக கார் பந்தயம் நடந்து முடிந்தது. அதில்தான் தற்போது புதிதாக பிரச்சனை முளைத்துள்ளது.
அதாவது சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக ஒரு பக்க சாலையை மூடி இரும்பு வேலிகள் அமைத்து பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவர்களின் பொழுதுபோக்கிற்கு மக்களை சிரமைப்படுத்தி பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து மக்களின் வரிப்பணத்தில் போட்டி நடத்துகின்றனர். நடத்திவிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் தானே, அந்த சாலையை தானே மக்கள் பயனப்டுத்துவார் என்கிற இங்கிதம் இல்லையா என்று பொதுமக்கள் திமுக அரசை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.