விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டை நடிகர் விஜய் நடத்தினார். பல உபதேசங்களை அவர் மாநாட்டில் முழங்கினார்.
மாநாடு காலையில் தொடங்கியதில் இருந்தே தவெகவினரின் அளப்பறைகள் தாங்க முடியல. வழியெங்கும் சரக்கு சரக்கு அமோகமாக ஓடியது. மாநாட்டை திடலே திறந்த வெளி மதுக்கடை பாராக மாறியது. ரெண்டு மணி நேரத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கில் வாட்டர் பாட்டில்கள் அடுக்கி வைகப்படிருந்த போதிலும் அவை வழங்கப்படாததால் தாகத்தில் தொண்டர்கள் தவித்தனர். பலருக்கு மூச்சுத் திணறல் ஏறப்பட்டது. சாப்பாடு குடிதண்ணீர் இல்லாமல் பலர் தவித்தனர். கழிவறைக்குச் சென்று தண்ணீர் குடிக்க வேண்டிய அவலம் நேரிட்டது. விக்கிரவாண்டி நோக்கி பயணித்த தொண்டர் ஒருவர் மாநாட்டு பந்தலை பார்க்கும் ஆர்வத்தில் ரயிலில் இருந்து குதித்த போது உடல் சிதறி மரணம் அடைந்தார். வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டு உயிரிழந்தனர்.
மூச்சுத் திணறல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஒரு வழியாக விஜயின் தவெக மாநாட்டால் விக்கிரவாண்டி குப்பைமேடாக மாறியது. மாநாட்டு திடலில் 2,000க்கும் மேற்பட்ட சேர்கள் நாசமடைந்து கிடந்தன. தண்ணீர் பாட்டில் வீசுப்பட்டு குவியல் குவியலாக கிடந்ததால் பொதுமக்கள் முகம் சுளித்தனர்.
நாட்டை திருத்துவதாக கூறி மாநாடு விஜய் நடத்திய மாநாட்டு திடல் குப்பை காடாக மாறி சரக்கு அமோகமாய் ஓடியதை பார்த்து ‘ஆஹா ஆரம்பமே அமர்க்களம்’ என்று கூறுகின்றான் மக்கள்.