முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அபாயகரமானதாக உள்ளது, ஆனால் திமுக அரசு தமிழக மக்களை தவறாக வழிநடத்துவதில் மும்முரமாக உள்ளது. தென் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிராந்திய ஏற்றத்தாழ்வை சரிசெய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆய்வறிக்கை ஒன்றை குறிப்பிட்டு திமுக அரசு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் 2022-2023 ல் வேலையின்மையால் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குஜராத்தில் 5 சதவீதமும், உத்தர பிரதேசம் 7 சதவீதமும், கர்நாடகா 8.5 சதவீதமும், மஹாராஷ்டிரா 10.9 சதவீதமும், தமிழ்நாடு 17.5 சதவீதமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 17.5 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் ஒன்றான நமது தமிழகத்தில் தான் வேலையின்மை விகிதம்
அதிகமாக உள்ளது. இதனை திமுக அரசு எவ்வாறு சரி செய்ய போகிறது.
தமிழகத்தில் 31 லட்சம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என்று ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறுகிறார். இந்த ஆய்வறிக்கை பார்க்கும்போது 31 லட்சம் வேலைவாய்ப்பினை எங்கே உருவாக்குனீர்கள்.வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். ஏன் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. தண்ணீர் இல்லை, குறிப்பாக தென் தமிழகத்தில் இல்லை. வரக்கூடிய நிறுவனங்கள் எதுவுமே தென் தமிழகத்திற்கு போவதில்லை. சென்னை காஞ்சிபுரம் சுற்றி மட்டுமே அதிக அளவில் கம்பெனி வருகிறது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி போங்க, கன்னியாகுமாரி போங்க, மதுரைக்கு போங்க எங்கேயும் நிறுவனங்கள் கிடையாது. நிறுவனங்கள் இல்லை என்றால் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். வேலை கிடைக்காத இளைஞர்கள் வெளிநாடு செல்ல தொடங்கி கொண்டிருக்கிறார்கள். கடுமையாக உழைக்கக்கூடிய இளைஞர்களுக்கு தென் தமிழகத்தில் ஏன் வேலை இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.