மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு நடிகர்கள், இயக்குனர்கள், தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரின் தவறை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ‘தகவல் தொழில் நுட்ப’ அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்த மசோதாவானது ‘தகவல் ஒளிபரப்பு’ அமைச்சகம் தொடர்புடையது. அந்த துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர்
- ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளது வருந்தத்தக்கது. அரசு அதிகாரிகள் கூட இதை கவனிக்காமல் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்
- உண்மையான அக்கறையோடு இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாலேயே இப்படிப்பட்ட தவறு நடைபெற்றுள்ளது.வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது,கவனத்துடன் செயல்படுவது தமிழக அரசுக்கு நல்லது. முதல்வர்,இதற்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்
எந்த துறைக்கு கடிதம் எழுத வேண்டும் என்று கூட தெரியாத இவரையா நாம் நம்பினோம் என்று நடிகர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைந்து இருப்பார்கள் என்று நெட்டின்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளது வருந்தத்தக்கது.
அரசு அதிகாரிகள் கூட இதை கவனிக்காமல் 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில்(2/3— Narayanan Thirupathy (@Narayanan3) July 6, 2021
உண்மையான அக்கறையோடு இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாலேயே இப்படிப்பட்ட தவறு நடைபெற்றுள்ளது.வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது,கவனத்துடன் செயல்படுவது தமிழக அரசுக்கு நல்லது. முதல்வர்,இதற்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்(3/3)
— Narayanan Thirupathy (@Narayanan3) July 6, 2021
ஒன்னும் பிரச்சனை இல்லை தலீவரே. எந்தெந்த பிரச்சனைக்கு எந்த துறை/அமைச்சகத்துக்கு கடிதங்கள் எழுத வேண்டும் அப்படின்னு பஞ்சாயத்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன உடனே போட்டுடலாம். அப்பறம் பாருங்க… pic.twitter.com/bpGO04U70G
— SG Suryah (@SuryahSG) July 6, 2021
https://twitter.com/arivalayam/status/1412305589502234626