ஏழை, எளியவர்களின், நலனை கருத்தில் கொண்டு. குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் முன்பே. சென்னையில் உள்ள அம்மா உணவகத்தை. கழக கண்மணிகள் சூறையாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் திருப்பூர் நல்லூரில் உள்ள, ‘அம்மா’ உணவகத்தை, திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆய்வு செய்ய வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தி.மு.க எம்.எல்.ஏ மிகவும் காலம் தாழ்த்தி வந்த காரணத்தினால் மக்கள் பலர் கடும் அவதி அடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். இன்று வரை திணறி வரும் படுத்தோல்வி அடைந்த தி.மு.க அரசு. ஏழை மக்களின் வயிற்றிலுமா? அடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.