மணல் கடத்தலை தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல் : கலெக்டருக்கு அதிரடி உத்தரவிட்ட கோர்ட் !

மணல் கடத்தலை தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல் : கலெக்டருக்கு அதிரடி உத்தரவிட்ட கோர்ட் !

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பகுடி பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும், அங்கு சில நாட்களாக மணிமுத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சட்ட விரோதமாக பல டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாகவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயி பாலமுருகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மணல் கடத்தலை தட்டி கேட்டபோது அவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று கூறப்படுகிறது. மணல் அள்ளுவதற்கு அனுமதி வாங்கிய இடத்தை மட்டும் அல்லாமல் சட்ட விரோதமாக மற்ற பகுதிகளிலும் மணல் கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த விவகாரத்தில் கனிம வளத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றசாட்டை வைத்தார்.

எனவே மணிமுத்தாறு பகுதியில் சட்ட விரோதமாக மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும், இதுவரை அங்கு அள்ளப்பட்ட மணல் அளவு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட பகுதியில் மணல் அள்ளுவதற்கான அனைத்து புகைப்பட ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதனைப் பார்த்த நீதிபதிகள் இந்த அளவு கனிம வளம் கொள்ளை போகின்றது இதை தடுக்கக்கூடிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதேபோல கனிமவளத் துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *