இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளதும், சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும். பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஷமிகா ரவி, அபூர்வ் குமார் மிஸ்ரா மற்றும் ஆப்ரஹாம் ஜோஸ் ஆகியோர், 1950 முதல் 2015 வரை மக்கள் தொகை குறித்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.84 சதவீதமாக இருந்தது. அது, 14.09 சதவீதமாக அதிகரித்தது. இது 43.15 சதவீதம் அதிகம் ஆகும்.
கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது(5.38 சதவீதம்)
சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.(6.58 சதவீதம்)
புத்த மதத்தை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை 0.05 சதவீதத்தில் இருந்து 0.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆனால், ஜெயின் சமூகத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சி சமூகத்தினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் முஸ்லிம் நாடுகளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாலத்தீவில் மட்டும், பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
உலகளவில் 123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 44 நாடுகளில் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.