தனது தாயால் மட்டுமே மரணம் நேரிட வேண்டும் என வரம் பெற்ற நரகாசுரன், கொடுஞ்செ யல்களில் ஈடுப்பட்டதால்
அந்த அரகனை, அவர்து தாய், பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து வதம் செய்கிறார். இந்த நாளே தீபாவளியாக கொண்டாப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மகாவீரர் பிறந்த நாளை ஜெய்னர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றார். ராமபிரான் வனவாசம் முடிந்து நாடு திரும்பியதை மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடியதும் தீபாவளியாக கொண்டாட்டபடுகிறது. இப்படி தீமைகள் ஒழிந்து நன்மைகள் தழைக்க கொண்டாப்படும் தீபாவளி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.அதிகாலையிலேயே மக்கள் நீராடி, புத்தாடை அணிந்து வீடுகளில் இனிப்புவகை உள்ளிட்ட உணவு பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்தனர்.தீபாவளி பண்டிகையையொட்டி ஆலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மக்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.தீபாவளி பண்டிகையை யொட்டி நாடே குதூகலத்தில் திளைத்துள்ளது.